Thursday, November 25, 2010

ஆரோக்யமான மக்கள் வலிமையான தேசம்: சென்னை துவக்க விழா

 
Tuesday, November 23rd, 2010
சென்னை நவம்பர் 21 முதல் 28 வரை பொது சுகாதார வாரமாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தேசிய அளவில் அறிவித்துள்ளது. இந்த ஒரு வார காலத்தில் மக்களிடையே ஆரோக்கியம் மற்றும் பொது சுகாதாரம் இவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தேசிய அளவில் பல்வேறு பிரசாரங்களை நடத்தி வருகிறது. இந்த வருடம் 12 மாநிலங்களில் நடத்தப்படவுள்ளது .
சென்னை மெரினாகடற்கரையில் நடைபெற்ற மாராதான் ஓட்டம்.

 பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் சென்னை மாவட்டதலைவர் சகோதரர் நஜீம் "உடல் பயிற்சியும் உடல் நலமும்"  என்ற புத்தகத்தை வெளியிட  பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர் ஜுல்பிகார் அலி பெற்றுக்கொண்டார்.



தமிழகத்தில் இதன் துவக்க விழாவாக பாப்புலர் பிரண்ட் மாநில தலைவர் எம் முஹமத் அலி ஜின்னா அவர்களின் தலைமையில் சென்னை மெரீனா கடற்கரையில் மினி மாரத்தான் ஓட்டம் நவம்பர் 21 அன்று காலை ஏழு மணிக்கு நடைபெற்றது .
அண்ணா சதுக்கத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை நடைபெற்ற இந்த ஓட்டத்தை மாநில பொது செயலாளர் அஹமத் பக்ருதீன் தொடங்கி வைத்தார் . மாநில செயலாளர் நிஜாம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஜுல்பிகார் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
கலங்கரை விளக்கத்தில் மாநில தலைவர் முஹமத் அலி ஜின்னா அவர்கள் பேசும்போது "மக்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் தேசம் வலிமை பெற முடியும் . இதன் அடிப்படையில் கடந்த வருடம் நவம்பர் 1-15 வரை பல்வேறு பயிற்சி வகுப்புகள் விழிப்புணர்வு கூட்டங்கள் இலவச மருதுதுவ முகாம்கள் நடத்தப்பட்டது இந்த வருடமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் .உயிர்கொல்லி நோயான நீரிழிவு இரத்த அழுத்தம் கேன்சர் போன்ற பல வியாதிகளில் மக்கள் துன்பப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இதற்க்கு காரணம் உணவு பழக்க வழக்கம் மற்றும் உடற்பயிற்சி குறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாததுதான் . தினமும் அரைமணிநேரம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கி நல்ல பழக்க வழக்கங்களை சரிவிகித உணவு பழக்கத்தை மேற்கொண்டால் பல நோய்களிலிருந்து விடுபடலாம் "
மேலும் ஆரோக்கியம் பற்றிய "உடல் பயிற்சியும் உடல் நலமும் " என்ற புத்தகம் வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்டது . ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment